Skip Navigation

National Geographic Society This program is distributed in the U.S. and Canada by National Geographic and EHD. [learn more]

Multilingual Illustrated DVD [Tutorial]

The Biology of Prenatal Development




பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி

.தமி [Tamil]


 
Download English PDF  Download Spanish PDF  Download French PDF  What is PDF?
 

Chapter 15   5 Weeks: Cerebral Hemispheres

4 முதல் 5 வாரங்களுக்குள், மூளை வேகமாக வளர்ந்து 5 தனிப்பட்ட பகுதிகளாக பிரிகின்றன.

தலையின் அளவு கருவின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

மூளையின் அரைக்கோளம் தோன்றி, மெல்ல மெல்ல மூளையின் பெரும்பகுதியாக மாறுகிறது.

மூளையின் அரைக்கோளத்தால் கட்டுப்படுத்தப்படும் செயல்களுள் சிந்தனை, கல்வி, நினைவாற்றல், பேச்சு, பார்வை, கேட்டல், தானாக அசைதல், மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவை அடங்கும்.

Chapter 16   Major Airways

சுவாச அமைப்பில், வலது மற்றும் இடது பக்க முதன்மை பிராங்க்கை உள்ளன. இவை மூச்சுக்குழலை நுரையீரலுடன் இணைக்கின்றன.

Chapter 17   Liver and Kidneys

வயிற்றுப்பகுதியை அடைக்கும் ஈரலை கவனியுங்கள் இது துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் அருகில் உள்ளது.

5 வாரங்களில் நிரந்தரமான சிறுநீரகங்கள் தோன்றுகின்றன.

Chapter 18   Yolk Sac and Germ Cells

கரு உறை இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளது. இவை ஜெர்ம் செல்கள் எனப்படும். 5 வாரங்களில் இவை இனப்பெருக்க உறுப்புகளுக்கு இடம் பெயர்கின்றன. இனப்பெருக்க உறுப்புகள் சிறுநீரகத்திற்கு அருகில் உள்ளன.

Chapter 19   Hand Plates and Cartilage

5 வாரங்களில், கருவின் கைத்தட்டு உருவாகிறது. 5 ½ வாரங்களில் குருத்தெலும்பு உருவாகத் தொடங்குகிறது.

இங்கு நாம் காண்பது 5 வாரங்கள் 6 நாட்களான கருவின் இடப்பக்கக் கைத்தட்டு மற்றும் மணிக்கட்டு.

Embryonic Development: 6 to 8 Weeks

Chapter 20   6 Weeks: Motion and Sensation

6 வாரங்களில் மூளையின் அரைகோளங்கள் மூளையின் மற்ற பகுதிகளை விட வேகமாக வளர்கின்றன.

கரு தன்னிச்சையான மற்றும் அனிச்சையான அசைவுகளை தொடங்குகிறது. இத்தகைய அசைவுகள் நரம்புத் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.

வாய்ப்பகுதியில் தொடுதல் கருவை அனிச்சையாக தலையை உள்ளுக்கு இழுக்கச் செய்கிறது.

Chapter 21   The External Ear and Blood Cell Formation

வெளிப்புறக் காது உருவாகத் தொடங்குகிறது.

6 வாரங்களில், ஈரலில் உள்ள லிம்ஃபோஸைட்டுகளில் இரத்த அணுக்கள் உருவாகின்றன. இந்த வெள்ளை இரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Chapter 22   The Diaphragm and Intestines

உதரவிதானம், சுவாசதிற்கு பயன்படும் முக்கிய தசை, 6 வாரங்களில் உருவாகிறது.

குடலின் ஒரு பகுதி தற்காலிகமாக தொப்புள் கொடிக்குள் செல்கிறது. உடலியல் ஹெர்னியேஷன் எனப்படும் இச்செயல், வயிற்றுப் பகுதியில் வளரும் மற்ற உறுப்புகளுக்கு இடமளிக்கிறது.

Chapter 23   Hand Plates and Brainwaves

6 வாரங்களில் கைத்தட்டுகள் தட்டை உருவம் பெறுகின்றன.

6 வாரங்கள் மற்றும் 2 நாட்களில் மூளையின் அலைவரிசைகள் பதிவு செய்யப்படுள்ளன.

Chapter 24   Nipple Formation

உடலின் பக்கவாட்டில் மார்புக்காம்புகள் தோன்றுகின்றன இவை பின்பு தமது நிரந்தர இடமான மார்பின் முன்புறத்தை அடைகின்றன.

Chapter 25   Limb Development

6 ½ வாரங்களில் முழங்கைகள் தோன்றி, விரல்கள் விரியத் தொடங்கி, கை அசைவுகள் காணப்படுகின்றன.

ஆஸிஃபிக்கேஷன் எனப்படும் எலும்புகள் உருவாகும் செய்கை க்ளாவிக்கிள் அல்லது காறை எலும்பு, மேல் மற்றும் கீழ் தாடை எலும்புகள் உருவாவதில் தொடங்குகிறது.

Chapter 26   7 Weeks: Hiccups and Startle Response

7 வாரங்களில் விக்கல்கள் தோன்றுகின்றன.

திடுக்கிடும் இயக்கங்களுடன் கூடிய கால் அசைவுகளை இப்போது காணலாம்.

Chapter 27   The Maturing Heart

4 அறைகளுடன் கூடிய இதயம் முழுமையான வளர்ச்சி அடைகிறது. இதயம் இப்போது சராசரியாக நிமிடத்திற்கு 167 முறை துடிக்கிறது.

7 ½ வாரங்களில் பதிக்கப்பட்ட இதயத்தின் மின் நிகழ்வுகள் தோற்றுவிக்கும் அலை அமைப்பு வளர்ந்த மனிதனின் அமைப்பை ஒத்து இருக்கிறது.

Chapter 28   Ovaries and Eyes

7 வாரங்களில் பெண் கருவில் முட்டைகள் காணப்படுகின்றன.

7 ½ வாரங்களில் கண்ணின் வண்ண விழித்திரை காணப்படுகிறது. கண் இமைகள் வேகமாக வளர்கின்றன.

Chapter 29   Fingers and Toes

கைவிரல்கள் பிரிந்து கால்விரல்கள் அடிவாரத்தில் இணைந்துள்ளன.

கைகளை இப்போது அருகருகே கொண்டுவர முடியும், கால்களையும்.

கால் முட்டிகள் காணப்படுகின்றன.

The 8-Week Embryo

Chapter 30   8 Weeks: Brain Development

8 வாரங்களில் மூளை வெகுவாக வளர்ச்சி அடைகிறது இதன் எடை சராசரியாக கருவின் மொத்த உடல் எடையில் பாதி ஆகும்.

அசாதாரண வேகத்தில் வளர்ச்சி தொடர்கிறது.

Chapter 31   Right- and Left-Handedness

8 வாரங்களில் 75% கருக்கள் வலது கை ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. மீதமுள்ளவை சரிசமமாக இடது கை ஆளுமை அல்லது ஆளுமையின்மையை வெளிப்படுத்துகின்றன. இது வலது அல்லது இடது கைப்பழக்கத்தின் ஆரம்பகால சாட்சியமாகும்.

Chapter 32   Rolling Over

"உருளும்"திறமை பிறப்பிற்கு 10 முதல் 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படுவதாக பாடப்புத்தகங்கள் கூறுகின்றன. ஆனால் இச்செயல் ஈர்ப்புச்சக்தி குறைந்த, ஆம்னியாட்டிக் திரவம் நிறைந்த கருப்பையில் ஆரம்ப காலத்திலேயே காணப்படுகிறது. கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள ஈர்ப்புச் சக்தியை வெல்லப் போதுமான அளவு பலம் இல்லாததால் பிறந்த குழந்தை உருளுவது தடுக்கப்படுகிறது.

இக்காலகட்டத்தில் கரு மிகவும் துடிப்புள்ளதாக உள்ளது.

அசைவுகள் மெதுவாகவோ அல்லது வேகமாகவோ, தனியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ, தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ ஏற்படுகிறது.

தலையை சுழற்றுதல், கழுத்தை நீட்டுதல், கையால் முகத்தைத் தொடுதல் ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன.

கருவைத் தொடும்போது கண்சிமிட்டல், தாடை இயங்குதல், எட்டிப் பறித்தல், கால்நகத்தை நீட்டுதல் ஆகியவை வெளிப்படுகின்றன.

Chapter 33   Eyelid Fusion

முதல் வாரங்களுக்குள் கண் இமைகள் கண்ணின் மீது வேகமாக வளர்ந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.

Chapter 34   "Breathing" Motion and Urination

கர்பப்பையில் காற்று இல்லாவிட்டாலும், வாரங்களில் கரு சுவாசிப்பதை போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தக் கட்டத்தில் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வெளிப்படுகிறது இது ஆம்னியாட்டிக் திரவத்தில் கலக்கிறது.

கரு ஆணாக இருக்கும் பட்சத்தில், வளர்ச்சியடையும் விரைகள் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து வெளிப்படுத்துகின்றன.

Chapter 35   The Limbs and Skin

எலும்புகள், இணைப்புகள், தசைகள், நரம்புகள், மற்றும் கை கால்களின் இரத்த நாளங்கள் வளர்ந்த மனிதர்களினுடையதை ஒத்து இருக்கிறது.

வாரங்களில் எப்பிடர்மிஸ் அல்லது வெளிப்புறத் தோல், பல அடுக்குகளைக் கொண்ட சவ்வாக மாறி, மென்மைத் தன்மையை இழக்கிறது.

முகத்தில் புருவங்களும், வாயைச் சுற்றி முடியும் வளர்கிறது

Chapter 36   Summary of the First 8 Weeks

எட்டாம் வாரம் கருவின் இறுதிக் காலகட்டத்தைக் குறிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், மனிதக் கருவானது ஒற்றை அணு செல்லிலிருந்து ஏறத்தாழ 1 பில்லியன் செல்களாக வளர்ந்து 4000-த்துக்கும் மேற்பட்ட உடல் அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் கருவானது வளர்ந்த மனித உடலிலுள்ள அமைப்புகளில் 90%அமைப்புகளைப் பெற்றுள்ளது.


Add a Comment

Your Name: Log In 3rd-party login: Facebook     Google     Yahoo

Comment: